30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதுவரை கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளதவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை வழங்கியுள்ளது.
இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கடந்த வாரம் நிறைவடையவிருந்த நிலையில், தற்போது அதற்காக மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.