நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் விசேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் புத்தக விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார பணிப்பாளர் நாயகத்திடம் பொலிஸ்மா அதிபர் சிடி.விக்ரமரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளரினால் எழுதப்பட்ட கோரிக்கையை அடுத்தே பொலிஸ்மா அதிபர் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் இத்தகைய கோரிக்கையினை கருத்திற் கொண்டு, ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்திலும் புத்தக விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் சுகாதார பணிப்பளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.