follow the truth

follow the truth

July, 19, 2025
Homeஉள்நாடுஅரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்து விசேட வர்த்தமானி

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்து விசேட வர்த்தமானி

Published on

அனைத்து அரச ஊழியர்களும் ஓய்வு பெறும் வயதெல்லை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், அனைத்து அரச ஊழியர்களும் 60 வயதை எட்டியவுடன் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

55 வயதை பூர்த்தி செய்கின்ற அரச பணியாளர் ஒருவரை ஓய்வு பெற பணிக்கலாம் என்றும், விசேட தீர்மானங்களின் அடிப்படையில் அவரது ஓய்வு வயதெல்லை நீடிக்கப்பட்டாலும், அவர் 60 வயதில் கட்டாயம் ஓய்வு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய வரவு செலவுத்திட்டத்தில், அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லையை 60ஆக குறைக்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்துடன் நேற்று (05) குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த உத்தரவு எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று(17)...

வலுசக்தி அலுவல்கள் பற்றிய உப குழு நியமனம்

உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா...

ராஜித சேனாரத்னவின் முன்பிணை மனு நிராகரிப்பு

இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தம்மை கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணை வழங்குமாறு கோரி முன்னாள் அமைச்சர்...