இலங்கையின் கல்விமுறையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளாக அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால், அந்த பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு குழுவினர் மேல் தளத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் படிக்கட்டுகளில் வெந்நீரை ஊற்றுவதற்கு மாணவர்களின் குழு ஏற்பாடு செய்துள்ளதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020/2021 தொகுதி மாணவர்களைத் தவிர மற்ற அனைத்து பீடங்களின் மாணவர்களையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.