follow the truth

follow the truth

July, 25, 2025
Homeஉள்நாடுஉயர்தர விடைத்தாள் மதிப்பீடு : வெள்ளியன்று விசேட கலந்துரையாடல்

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு : வெள்ளியன்று விசேட கலந்துரையாடல்

Published on

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.

இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இதுவரை 15,000 ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த அமைச்சுப் பத்திரம் ஒரு மாதத்திற்கு முன்னரே சமர்ப்பிக்கப்பட்டதாகவும், சிரமங்கள் இருந்த போதிலும், அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ஓரளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பெறுபேறுகளை பூர்த்தி செய்வதற்கு 1,300 பல்கலைக்கழக பேராசிரியர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

அவர்களுக்கும் தொழில் ரீதியாக பிரச்சினை இருப்பதாக தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதி அமைச்சுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயில் கடவை திருத்தும் பணிகள் காரணமாக மூடப்படவுள்ள வீதி

பொத்துஹெர அமுனுகம ரயில் கடவை சீர்த்திருத்தும் பணிகள் காரணமாக நெடுஞ்சாலை மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி,...

இலங்கை வர்த்தகக் கவுன்ஸிலின் உலகளாவிய சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் ஆரம்ப விழா

கொழும்பு ஷாங்க்ரிலா ஹோட்டலில் இன்று (25) நடைபெற்ற இலங்கை வர்த்தக கவுன்ஸிலின்(Global Federation of Sri Lankan Business...

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்ய உத்தரவு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த...