சூடான் இராணுவத்திற்கும் அதிகாரப்பூர்வமற்ற ஆயுதப்படை குழுக்களுக்கும் இடையே மோதல் நடந்து 5 நாட்கள் ஆகிறது.
இரு தரப்பினரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் போர் நிறுத்தத்தை அமுல்படுத்தியும் அது தோல்வியடைந்தது.
இதனைக் கருத்தில் கொண்டு சூடான் தலைநகர் கார்டூம் உட்பட பல நகரங்களில் மீண்டும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கடுமையான சண்டைக்கு மத்தியில் தலைநகர் கார்ட்டூமில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சூடானில் இருந்து பல வெளிநாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன. ஜப்பான் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகள் மீட்பு பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
சூடான் மோதலில் இதுவரை 270 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 2,600 பேர் காயமடைந்துள்ளனர்.