follow the truth

follow the truth

July, 30, 2025
Homeஉள்நாடுகடந்த வாரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவு

கடந்த வாரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவு

Published on

கடந்த வாரம் மாத்திரம் 1900 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த சிகாதார பிரிவுகளும் இந்த அதிக அபாய வலயங்களில் உள்ளடங்குவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள சில சுகாதார மற்றும் மருத்துவ பிரிவுகளும் டெங்கு அபாய வலயங்களுக்குள் உள்ளடங்கியுள்ளன.

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர், கம்பஹா மாவட்டத்திலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடிக்கான புகையிலை வரியினை அதிகரிக்க அனுமதி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பீடிக்கும் அறவிடப்படும் புகையிலை வரியை ரூ. 2 இல் இருந்து ரூ. 3...

ரஷ்யாவில் 13 அடி உயர சுனாமி அலைகள் – ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள்...

எசல பெரஹராவை முன்னிட்டு விசேட ரயில் சேவை

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு, இலங்கை ரயில்வே திணைக்களம் பல விசேட ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த...