பிபிலை கொடிகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் பிபிலை வலயக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.
இதன் காரணமாக பிபிலை – மொனராகலை பிரதான வீதியில் சுமார் 05 மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.