மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொக்கா புயலினால் மியான்மரின் துறைமுக நகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் புயலினால் நாட்டின் தகவல் தொலை தொடர்பு சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 210 கிமீ வேகத்தில் வீசிய காற்றினால் மியான்மரில் செல்போன் டவர்கள், வீடுகளின் கூரைகள் என அனைத்தும் காற்றில் வீசப்பட்டன.
புயலினால் பெய்த மழையினால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.