அரச பொசன் விழாவிற்கு அரசினால் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பிலான அறிவிப்பு

422

அரச பொசன் விழாவிற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் அனுராதபுரம் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

அதற்காக அரசாங்கம் 31 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவின் வினவலின் போது தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், அரச பொசன் விழாவுக்கு அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்காதது தொடர்பில் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பீடாதிபதி வலஹங்குணவெவே தம்மரதன தேரர் அண்மையில் கண்டனம் வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here