எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் போன்று காதுகளை கடிப்பவர் என டயனா கமகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பயன்படுத்தி காலையில் இருந்து கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் காதுகளை கடிப்பது மட்டுமல்லாமல் ஏனைய உறுப்பினர்களின் நேரத்தையும் முழுமையாக சாப்பிடுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனாலேயே தேசிய முக்கியம் வாய்ந்த ஒரு சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க வெறும் இரண்டு மூன்று நிமிடங்கள் கிடைக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒரு வீட்டில் தாய் சமைத்து விட்டு இறுதியாகத்தான் சாப்பிடுவார் ஆனால் சஜித் பிரேமதாசவோ அனைத்தையும் சேர்த்து சாப்பிட்டு விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.