பல நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் எதிர்க்கட்சிகளும் தமது நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு கூட்டுத் தீர்வுகளை எதிர்பார்த்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அப்படியிருந்தும் எமது நாட்டில் எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகள் அரசை கவிழ்ப்பதற்கு அல்லது அரசாங்க அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் சதியே என பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சியினரின் பொறுப்பற்ற செயற்பாடு இன்று உணரப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
தனது குழு எப்போதும் நடைமுறைச் செயற்பாடுகளைக் கொண்டிருந்ததுடன் நிபந்தனையின்றி அரசை பலப்படுத்த தேவையான ஆதரவை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பசறை தொகுதியில் இணைந்துகொண்ட உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எந்த நேரத்திலும் அரசாங்க அதிகாரத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், ஆனால் அரசின் பாதுகாப்பே முதன்மையானது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.