follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுமின் ஒழுக்குகளை சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

மின் ஒழுக்குகளை சீர் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை

Published on

பதுளை, மாப்பகல பிரிவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த பணிப்புரையை அடுத்து பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தால் மேற்படி தோட்டத்துக்கு பிரதிநிதிகள் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தங்குமிட வசதி, உணவு மற்றும் மருத்து வசதிகளை இந்த குழு ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது. அத்துடன், அவர்களுக்கான மாற்று இடங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சருக்கு அறிக்கையொன்றையும் கையளிக்கவுள்ளது.

அத்தோடு, எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் நடக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பற்ற மின்கம்பங்கள் மின் ஒழுக்குகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அவற்றை சீர் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்த அந்தத் தாயின்அன்பு.. விதியின் விளையாட்டு வென்றது

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் பேருந்து விபத்து நடந்தபோது, ஒரு தாயின் அன்பின் வலிமையை உலகிற்கு உணர்த்தும்...

கொத்மலை – கெரண்டி எல்ல விபத்து குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொத்மலை - கெரண்டி எல்ல பிரதேசத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக...

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...