மத்திய மலைநாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
இதன் காரணமாக, ஹட்டன் கொழும்பு பிரதான வீதி, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதி மற்றும் பக்க வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது தங்களுடைய வாகனத்தின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்யுமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.