கம்பஹா மாநகர சபையின் அனைத்து பிரிவுகளையும் கணக்காய்வு செய்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கம்பஹா மாநகர ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.
மாநகரசபைக்கு சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
இதற்கு அதிகாரிகளின் பலவீனங்களே பிரதான காரணம் என தெரிவித்த அமைச்சர், அவ்வாறான அதிகாரிகளை நீக்கிவிட்டு திறமையான அதிகாரிகளை கொண்டு பணிகளை தொடர தயார் எனவும் தெரிவித்தார்.
கம்பஹா மாநகர சபையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.