follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுஓய்வுபெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கான ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை?

ஓய்வுபெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கான ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை?

Published on

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் உத்தேச பதவியணி குறித்து
வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்திராரச்சி தலைமையில் கூடியபோதே கலந்துரையாடப்பட்டது.

பல தடவைகள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதை நினைவுபடுத்திய குழுவின் தலைவர், இப்பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வை வழங்குமாறு முகாமைத்துவ சேவைகள் திணைக்கள அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில், ஓய்வூதிய பங்களிப்பு வழங்குவதில் உள்ள பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடி அனைத்துத் தரப்பினருக்கும் இறுதித் தீர்மானம் வழங்குமாறும் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஒப்சன் மாற்றங்கள் செய்வது தொடர்பில் ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையின் படியே செயற்படுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இவ்விடயத்தில் காணப்படும் நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்க எழுத்துமூலம் இணக்கப்பாட்டை வழங்குவதாக சமுர்த்தி திணைக்களமும், நிதி அமைச்சும் இணக்கம் தெரிவித்தன. இந்த எழுத்துமூல இணக்கப்பாடு கிடைக்கப்பெற்றதும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழு, அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்தது.

ஓய்வுபெற்ற சமுர்த்தி அதிகாரிகளுக்கான ஓய்வூதியத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய குழுவின் தலைவர், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை வழங்க முடியும் என்பதை இரண்டு வாரங்களுக்குள் குழுவுக்கு அறிவிக்குமாறும் பரிந்துரைத்தார்.

இவ்விடயத்தில், தீர்வொன்றை வழங்கும்போது மனிதாபிமான பக்கத்தையும் கருத்தில் கொண்டு தீர்வொன்றை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். ஓய்வூதியம் பெறும் சமுர்த்தி அதிகாரிகளிடம் அறவிடப்படும் வட்டி குறித்த சுற்றுநிருபத்தை தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

சமுர்த்தி உத்தியோகத்தர்களால் வைப்பிலிடப்படும் ஊழியர் நம்பிக்கை நிதியை ஓய்வூதியமாக மாற்றுவதற்கு 4% வரி அறவிடுவது குறித்தும் குழு கலந்துரையாடியது. அதற்கமைய, இப்பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் தீர்வை வழங்க வேண்டுமென தலைவர் வலியுறுத்தினார். மேலும், விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்தின் நிலுவைத் தொகைக்கு 4% கூடுதல் வட்டி வசூலிப்பது பொருத்தமற்றது என்பதும் குழுவின் நிலைப்பாடாக இருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...