ரயில் என்ஜின்களின் பற்றாக்குறை காரணமாக உரிய நேரத்தில் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், நாளாந்தம் ரயில் பயணங்கள் சிலவற்றை இரத்து செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இதிபொலகே தெரிவித்தார்.