நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 250-ஐ விட அதிகரிப்பதாகவும் இம்மாதம் முதல் 5 நாட்களில் 1534 ஆக அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,000-ஐ தாண்டியுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதத்தில் 7995 ஆக இருந்த நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக நிலவிய மழையுடனான வானிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வருடத்தில் இன்று வரை 46 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.