மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பொல்கொல்ல அணையின் நான்கு வான் கதவுகள் இன்று (09) முதல் திறக்கப்பட்டுள்ளன.
மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வினால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கம் மற்றும் மகாவலி ஆற்றை அண்மித்த மக்கள் அவதானமாக இருக்குமாறு அணைக்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.