follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP2குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலையை நாடு எட்டியுள்ளது

குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலையை நாடு எட்டியுள்ளது

Published on

தற்போது சமூகத்தில் பெரியதொரு அவலம் நடந்து கொண்டிருப்பதாகவும், பிள்ளைகளுக்கு சரியாக உணவுகளை வழங்கவும், வீட்டுத் தேவையை பூர்த்தி செய்யவும் முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அவலத்தை மேலும் ஊக்குவிக்கும் ஒரு ஆட்சியே தற்போது உருவாகியுள்ளதாகவும்,

புத்தாண்டிலேயே இந்த பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் இந்நிலை மேலும் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க VAT அதிகரிக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க ஒரே வழி VAT ஐ அதிகரிப்பது அல்ல, மாறாக நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை நாட்டிற்கு திரும்பப் பெறுவதற்கான கட்டமைப்பை ஸ்தாபிப்பதே பொறுத்தமான வழி என்றும், திருடர்களை நம்பி ஜனாதிபதி, பிரதமர் போன்ற பதவிகளைப் பெற்றதாலயே தற்போதைய அரசாங்கத்தால் அதனை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும், எனவே திருடர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக திருடர்களைப் பாதுகாத்து வரும் வேளையையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 59 ஆவது கட்டமாக கம்பஹா புத்பிட்டிய மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (02) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகள் உள்ளிட்ட மருந்துத் துறையில் சமீபத்தில் நடந்த திருட்டு, ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்த போது, அதனை தோற்கடிக்க 113 உறுப்பினர்கள் கை தூக்கீனர் என்றும், அவர்களும் இந்நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்ற திருடர்கள் கூட்டமே என்றும், அவர்கள் திருடிய வளங்களை மீண்டும் எமது நாட்டிற்கு கொண்டு வர முடியுமாக இருந்தால், இவ்வாறு வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...