வைத்தியர்களுக்கு மாத்திரம் 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் மற்றும் கனிஷ்ட சுகாதார ஊழியர்கள் ஒன்றிணைந்து நாளை (11) காலை 6 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இன்று(10) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பிப்பதற்கு மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த முன்னணியினர் தீர்மானித்தனர்.
தமக்கும் 35,000 கொடுப்பனவை வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தெரிவு செய்யப்பட்ட பல வைத்தியசாலைகளின் தாதியர்களும் இன்று(10) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5