follow the truth

follow the truth

July, 21, 2025
Homeஉள்நாடுசுற்றுநிரூபத்தை மீறிய பாடசாலை ஆசிரியர்கள் இடமாற்றம்

சுற்றுநிரூபத்தை மீறிய பாடசாலை ஆசிரியர்கள் இடமாற்றம்

Published on

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சிங்களம் உள்ளிட்ட பாடங்களுக்குப் பணம் வசூலித்து பாடசாலை மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்கள் தொடர்பில் மத்திய மாகாண கல்வி அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசேட சுற்றுநிரூபம் ஒன்று வெளியிடப்பட்டது.

இதன்போது குறித்த சுற்றுநிரூபத்தை மீறி சில ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மத்திய மாகாண கல்வி அமைச்சும் விசேட சுற்றிவளைப்பு பிரிவை நிறுவி உரிய இடங்களில் சோதனை நடத்தியது.

முறையான விசாரணையின் போது சில ஆசிரியர்கள் தமது வகுப்பு மாணவர்களை மேலதிக வகுப்பில் பங்கேற்குமாறு அழுத்தம் கொடுப்பதாக கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சுற்றுநிரூபத்தை மீறி பணம் வசூலித்து மேலதிக வகுப்புகளை நடத்திய 51 பாடசாலை ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பாடசாலைகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரோஹிதவின் மகள் – மருமகன் வெளிநாடு செல்ல தடை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாலனை ஊழல் தடுப்பு பிரிவின்...

PAFFREL அமைப்பினால் பெண் தலைவர்களுக்கான செயலமர்வு

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு (PAFFREL) அமைப்பு பெண் தலைவர்களுக்காக ஒழுங்குசெய்த பாராளுமன்றம் குறித்து தெளிவுபடுத்தும்...

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி...