சீனாவின் மக்கள்தொகை 2023-ம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை கண்டுள்ளது.
கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் 142.57 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 140.9 கோடியாக உள்ளது.
கோவிட்19 காலக்கட்டத்தில் இறப்பு விகிதம் அதிகமாக ஏற்பட்டதோடு, அந்நாட்டில் பிறப்பு விகிதமும் சமீபமான இரண்டு வருடங்களில் குறைந்து உள்ளது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டும் இந்த சரிவை தடுக்க இயலவில்லை என்கிறது புள்ளிவிவரங்கள்.
எவ்வாறாயினும், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022 ஆம் ஆண்டில் சீன மக்கள் தொகை குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 2 மில்லியனால் குறைந்துள்ளதாகவும் அதன்படி, சீனாவில் தற்போது 1.4 பில்லியன் மக்கள் உள்ளதாகவும் தேசிய புள்ளியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.