கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் பணிபுரியும் கனிஷ்ட ஊழியர்கள் இருவரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர், குறித்த சம்பவத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ஓய்வு பெறும் கடிதத்தினை சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக மருத்துவ சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் வைத்தியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
72 சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு புற்றுநோய் பிரிவு ஊழியர்கள் ஆதரவு வழங்குவது தொடர்பாக ஊழியர்களுக்கும், சம்பந்தப்பட்ட வைத்தியருக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான சூழ்நிலையை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.