முஸ்லிம்களுக்கிடையேயான பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே பாதகமாக அமையும், எனவே முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் முஸ்லிம் சமூகத்திற்குள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ் ஷெய்க் அர்கம் நுரமித் தெரிவித்தார்.
அண்மையில் தனது இளைய மகனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இஸ்லாமிய ஐக்கிய பேரவையின் ஸ்தாபகர்கள் அவரது வீட்டுக்குச் சென்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் ஏனைய மதங்களுக்கு சம உரிமையும் வழங்கப்படுகின்ற நாடு இலங்கை. நாட்டின் குடிமக்களாக அனைத்து மக்களுக்கும் சம உரிமை உண்டு. இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5