follow the truth

follow the truth

February, 11, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாCinnamon Lakeside Colombo சூப் இற்கு மிளகினால் வந்த ஆப்பு!

Cinnamon Lakeside Colombo சூப் இற்கு மிளகினால் வந்த ஆப்பு!

Published on

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான Cinnamon Lakeside Colombo இனது உணவகத்தில் மனித பாவனைக்கு தகுதியற்ற சூப்’பை வழங்கியுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு விருந்தின் போது இந்த சூப் பரிமாறப்பட்டதுடன், அதன் தரத்தில் அதிருப்தி இருப்பதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு ஒரு நிறுவனத்திடமிருந்து முறைப்பாடு கிடைத்தது.

முறைப்பாட்டின்படி, பொது சுகாதார ஆய்வாளர்கள் சூப்பின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர்.

இரவு உணவின் போது சூப்புடன் வழங்கப்படும் வெள்ளை மிளகில் பிரச்சினை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கொழும்பில் உள்ள சினமன் லேக்சைடில், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற சூப் ஒருவருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான சமீபத்திய செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஸ்தாபனம் சம்பவம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.

குறித்த அறிக்கையில், குறித்த சம்பவம் உணவகத்தில் பரிமாறப்பட்ட சூப்புடன் தொடர்பில்லாதது என்று தெளிவுபடுத்தியதுடன், விருந்தினர் தனது சூப்பில் வெள்ளை மிளகை பயன்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Cinnamon Lakeside Colombo அவர்களின் விசாரணைகளின் போது சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் (PHIs) தீவிரமாக ஒத்துழைத்துள்ளது என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொள்முதல் செய்யப்பட்ட வெள்ளை மிளகின் அதே தொகுதியில் தனது சொந்த சோதனைகளை நடத்தியதாகவும் அதி பாவனைக்கு உகந்த பொருள் எனவும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

“அந்த நாளில் உணவகத்திலிருந்து இதுபோன்ற வேறு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை” என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், Cinnamon Lakeside Colombo சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துத்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகரிடமிருந்து அறிவிப்பு

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 16ற்கு அமைய 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை...

ரிஷாட் பதியுதீன் – பிரான்ஸ் முக்கிய அமைப்புக்குமிடையில் சந்திப்பு

பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில்...

மின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீதும், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துகின்றனர்

நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி...