அபுதாபியின் முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். 27 ஏக்கரில் அமைந்துள்ள கோயிலுக்கு 2019ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோயில் பாரம்பரிய முறைப்படி கற்களால் கட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை சேர்ந்த கைவினை கலைஞர்கள் கற்களை செதுக்கியுள்ளனர்.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலைத் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார்.
இந்த நிகழ்வைச் சிறப்பு வாய்ந்தது என்றும் “இருதரப்பு உறவுகளுக்கு வழிகாட்டும் சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் மதிப்புகளுக்கு ஏற்ப இது அமைந்திருக்கிறது” என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் அப்துல்நாசிர் அல்ஷாலி, குறிப்பிட்டுள்ளார்.