follow the truth

follow the truth

May, 8, 2025
Homeவிளையாட்டுஇருபதுக்கு-20 தொடர் இலங்கை வசம்

இருபதுக்கு-20 தொடர் இலங்கை வசம்

Published on

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சதீர சமரவிக்கிரம 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பெத்தும் நிஸ்ஸங்க 25 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 23 ஓட்டங்களையும் மற்றும் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் Azmatullah Omarzai மற்றும் Mohammad Nabi ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி, 188 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Karim Janat அதிகபட்சமாக 28 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில், ஏஞ்சலோ மெத்திவ்ஸ், பினுர பெர்ணான்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் மதீஷ பத்திரன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ரோஹித் சர்மா

இந்திய அணித்தலைவராக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான...

எல்லையில் பதற்றமான சூழல் – ஐ.பி.எல் போட்டியில் மாற்றம்?

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய இராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின்...

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...