வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்

1225

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற பொடி மெனிக்கே ரயிலில் பயணித்த இரு சுற்றுலா பயணிகளை நாவலப்பிட்டியில் ரயில்வே ஊழியர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சுற்றுலாப் பயணிகள் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டுகளுடன் முதல் வகுப்பில் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சுற்றுலாப் பயணிகள் இருவரையும் நாவலப்பிட்டி ரயில் நிலைய ஊழியர்கள் தாக்கி, ரயிலில் இருந்து வெளியே இழுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு வெளிநாட்டவர்களையும் ரயிலில் இருந்து இறங்குமாறு ரயில்வே கட்டுப்பாட்டாளரால் அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் இறங்க மறுத்ததால், ரயிலில் இருந்து அவர்களை வௌியேற்றியதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரயில்வே பாதுகாப்பு பிரிவிற்கு அறிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் H.M.K.பண்டார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here