திருத்தப்பட்ட மின்சார சபை சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புதிய சட்டமூலம் சட்ட திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் அடுத்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
விலை சூத்திரம் தொடர்பில் பங்குதாரர்களை அழைத்து எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக அவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் அண்மையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மின்வலு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.