இன்றிலிருந்து பால்மா விலை குறையுமா?

967

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு சங்கம் என்ற ரீதியில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பால் மா இறக்குமதியாளர்கள் 400 கிராமுக்கு 60 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 150 ரூபாவாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, தற்போது பால் மா சந்தையில் பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அசோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் பால் மாவின் விலையை குறைப்பதாக நியூசிலாந்தில் இருந்து பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று நேற்று (24) அறிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலை 250 முதல் 350 ரூபா வரையிலும், 400 கிராம் பால் மா பொதியின் விலை 100 ரூபா முதல் 140 ரூபா வரையிலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கைக்கும் பால் மா இறக்குமதியாளர் மன்றத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here