ஈரான் ஜனாதிபதியை சஜித் புறக்கணித்தது ஏன்?

1165

ஈரான் ஜனாதிபதியின் சந்திப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒருநாள் உத்தியோகபூர்வமாக பயணமாக இலங்கை வந்திருந்தார். ஜனாதிபதி மாளிகையில் ஈரான் ஜனாதிபதிக்கு விருந்துபசாரமளிக்கப்பட்டது. இதற்கு ஆளும், எதிர்க்கட்சி முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கபீர் அசீம், ரவூப் அக்கீம் ஆகியோரும் ஈரான் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.

எனினும், சஜித் பிரேமதாச இந்தச் சந்திப்பை புறக்கணித்திருந்தார். அமெரிக்கா மீதான பயத்தினால் சஜித் பிரேமதாச ஈரான் ஜனாதிபதியைச் சந்திப்பதை தவிர்த்துக் கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

சர்வதேச தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளாமல், எதிர்க்கட்சித் தலைவர் எவ்வாறு ஜனாதிபதி பதவிக்கு வந்து, நாட்டை வெற்றிகரமாக நிர்வகிக்க முடியும் என்ற கேள்வியை அரசியல் நோக்கர்களும் முன்வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், சஜித் பிரேமதாச சர்வதேச தொடர்புகளில் மிகவும் பலவீனமாக இருப்பதை எடுத்துக்காட்டுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here