follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉலகம்உலகில் 28 கோடி பேர் பட்டினியால் தவிப்பு

உலகில் 28 கோடி பேர் பட்டினியால் தவிப்பு

Published on

உலகம் முழுவதும் கடந்த 2023 ஆம் ஆண்டில் 28 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொண்டதாக ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் உணவு பாதுகாப்பு அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“2023 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பின்மை மோசமடைந்த நிலையில் சுமார் 28.20 கோடி மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டனர் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போர்ச் சூழல் உள்ள காசா மற்றும் சூடானில் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் பொருளாதார பாதிப்புகள் உள்ளிட்டவைகளால் கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளதுடன் போர், காலநிலை மற்றும் வாழ்க்கை செலவு நெருக்கடி ஆகியவற்றால் 2023 ஆம் ஆண்டில் சுமார் 30 கோடி மக்கள் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொண்டனர்.

13.50 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள 20 நாடுகள் அல்லது பிரதேசங்களில் கடுமையான பட்டினிக்கு மோதல் அல்லது பாதுகாப்பின்மை சூழ்நிலைகள் முக்கிய காரணமாகவுள்ளன.

வெள்ளம் அல்லது வறட்சி போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் 18 நாடுகளில் 7.20 கோடி மக்களின் கடுமையான உணவு பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாகும்.

மேலும் பொருளாதார பாதிப்புகளால் 21 நாடுகளில் 7.50 கோடி மக்கள் பட்டினி பாதிப்பை சந்தித்தனர் ” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும்...

6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்

ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். AI-ஐ மையமாக கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான...

இந்தியாவை தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமில்லை – பாகிஸ்தான் அமைச்சர்

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தி பயங்கரவாத...