follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம்

பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம்

Published on

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய வங்கியில் இன்று (07) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டும் வழமைக்கு திரும்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்

IMF திட்டத்துடன் இணக்கம் காணப்பட்ட இலக்குகள் என்பது அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட செயற்றிட்டம் என சுட்டிக்காட்டிய ஆளுநர், அரசாங்கம் இணங்கியுள்ள குறித்த செயற்றிட்டத்தை தற்போதைய முறையில் தொடர்ந்தால் நிலையாக பேண முடியும் என தாம் அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய பொருளாதார கொள்கையில் மாற்றம் ஏற்பட்டால், மீண்டும் பழைய கடினமான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் , தற்போது முன்னெடுக்கப்படுகின்ற கொள்கை எதிர்காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...