follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP2அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

Published on

சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.

இதுதவிர வரும் 21ம் திகதி காகித ஆவணங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.

இதனால், அரசிடம் இருந்து பெற்ற வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

எவ்வாறாயினும், டயானா கமகே அமைச்சின் உத்தியோகபூர்வ இல்லத்தினை இன்னும் கையளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இரட்டைக் குடியுரிமை விவகாரத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயின் பாராளுமன்ற உறுப்புரிமையை வறிதாக்கி உயர் நீதிமன்றம் கடந்த 08ம் திகதி தீர்ப்பளித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 11ம் திகதி டயானா கமகேவுக்கு வெளிநாடு செல்லவும் உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

இன்று முதல் தேர்தல் கடமைகள் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலாகும்...