இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தாம் நம்புவதாக இந்திய சிரேஷ்ட அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இன்று (10) புதுடில்லியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக விரைவில் இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜெய சங்கர் வெளிப்படுத்தினார்.