கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் அனைத்து அனுமதியற்ற கட்டிடங்களையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றறிக்கை இரண்டு வாரங்களுக்குள் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உட்பட புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிறிய நீர்வழிகள் மற்றும் வடிகால்கள் தடைபட்டமையே வெள்ளப்பெருக்குக்கான பிரதான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.