இன்று (10) பிற்பகல் பெம்முல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் இருந்து விழுந்தே இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் நெரிசலுக்கு மத்தியில் பாதுகாப்பற்ற வகையில் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரே இவ்வாறு ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.