follow the truth

follow the truth

July, 14, 2024
Homeஉள்நாடுஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள வியாழேந்திரன்

ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள வியாழேந்திரன்

Published on

நாட்டிற்கு குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்தாலும் கூட, அதைக் கூடிய விலைக்கு விற்கின்ற அல்லது அதிக விலைக்கு விற்பதற்கு விலையைத் தீர்மானிக்கின்ற ஒரு பாரிய மாபியா ஒன்று இருக்கின்றது.

இந்த விடயத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றேன். கூட்டுறவுச் சங்கங்கள் நேரடியாக பொருட்களை இறக்குமதி செய்து, சுமார் 03 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட அவர்களின் வலையமைப்பின் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் போது மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியும் என வர்த்தக, சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இதனைத் தெரிவித்தார்.

உலகில் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போது அந்நாட்டின் கூட்டுறவு அமைப்பின் ஊடாகவே குறைந்த விலையில் மக்களுக்கு பொருட்களை விநியோகித்தன. அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளில் கூட்டுறவுக் கட்ட்டைமைப்பு பலமாக இருக்கின்றது.

இந்நாடு தற்போது தான் பாரிய வீழ்ச்சியில் இருந்து எழுச்சி கண்டு வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் திடீறென்று எல்லாவற்றையும் சீர்செய்ய முயற்சித்தால் மீண்டும் இந்நாடு அதளபாதாளத்தில் விழுந்துவிடும்.

ஏற்கனவே இருந்த எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டிருந்தால் இன்று நானும் நீங்களும் இங்கே வந்திருக்க முடியாது. நாடு தற்போது கட்டியெழுப்பபட்டு வருகின்றது. நாம் காலங்காலமாக உற்பத்திப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தாமல், இறக்குமதியை நம்பி பழகிவிட்டோம்.

நாங்கள் விவசாய நாடு என்று கூறிக்கொண்டாலும் இன்னும் அரிசியை இறக்குமதி செய்து வருகின்றோம். தற்போது தான் நாம் படிப்படியாக பொருளாதார ஸ்திர நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் என்ற அடிப்படையில் ஏற்றுக்கொண்டாலும் கூட அவற்றை எல்லாம் ஒரே இரவில் செயற்படுத்த முடியாது. பணத்தை அச்சடித்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முற்பட்டதால் தான் நாட்டின் பணவீக்கம் அதிகரித்தது. இந்நாடு மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை நோக்கி செல்லாமால் மிகக் கவனமாக நாம் செயற்பட வேண்டியுள்ளதால் அவர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற முடியும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்தில் நாம் அன்று இருந்தாலும் கூட, தற்போதைய சூழலில் நாட்டை பொறுப்பேற்று பொருளாதார ரீதியில் ஸ்திர நிலைக்கு கொண்டு வந்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதல் குறித்து ஜனாதிபதி ரணில் விகரமசிங்க இன்னும் உத்தியோகபூர்வமான அறிவிக்கவில்லை. எனவே அவர் அவ்வாறு அறிவித்த பின்னர் எமது நிலைப்பாட்டையும் நாம் அறிவிப்போம்.

மேலும், ஊடகவியலாளர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். இன்று மேடைகளில் வீர வசனம் பேசுகின்றவர்களிடமும், பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக நாட்டில் ஏற்பட்ட போராட்ட கால கட்டத்தில் நாட்டை விட்டு ஓடிய, நாட்டில் ஒளிந்துகொண்ட மற்றும் நாட்டை பொறுப்பேற்க முன்வராத அரசியல் தலைவர்களிடமும் நீங்கள் ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று கேளுங்கள். அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பதைக் கேட்க பொது மக்கள் போன்று நானும் ஆவலுடன் இருக்கின்றேன்” என்று வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் மக்களுக்கு அழைப்பு

இனப்பிரச்சினைகள் இல்லாத இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் மக்களை அழைப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற...

டிரம்ப் படுகொலை முயற்சி குறித்து ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் படுகொலை முயற்சியால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ட்ரம்ப் பாதுகாப்பாக...

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் காயம்

அயர்ன் டோம் அமைப்பினால் அழிக்கப்பட்ட ஏவுகணையின் இரும்புத் துண்டினால் தாக்கப்பட்டதில் இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் வடக்கு...