follow the truth

follow the truth

October, 3, 2024
HomeTOP2தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்தியமை குறித்து விசாரணை

தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்தியமை குறித்து விசாரணை

Published on

பல்வேறு அரசியல் கட்சிகளினால் தமது அரசியல் பிரசாரங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பங்குபற்றுவதை அவதானித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையானது அனைத்து பெற்றோர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பிள்ளைகள் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்கக் கூடாது என அறிவித்தல் விடுத்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டம்

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு...

உள்நாட்டு அலுவல்கள், தொழில் அமைச்சிற்கு புதிய செயலாளர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றின்...

நாமல் ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவார் என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது

நாமல் குருநாகலில் இருந்து தேர்தலுக்கு வருவார் என்ற செய்தி தவறானது: வேட்பாளர்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எதிர்வரும் பொதுத்...