follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉலகம்காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் - ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

காஸாவில் பட்டினியில் வாடும் மக்கள் – ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

Published on

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.

ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன கூட்டமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அமைப்பு (IPC) அதன் சமீபத்திய அறிக்கையில், காசாவில் உணவுப் பாதுகாப்பு நிலைமை அக்டோபர் 2024 இல் அதன் கடைசி மதிப்பீட்டிலிருந்து கணிசமாக மோசமடைந்துள்ளதாகவும், அங்கு வாழும் பாலஸ்தீனியர்கள் பஞ்சத்தின் கடுமையான அபாயத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

காஸாவில் 50 லட்சம் மக்கள், அதாவது ஐந்தில் ஒருவர் கடுமையான பசியை எதிர்கொள்கிறார்கள் என்று IPC அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஐநாவின் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரிக் பெப்பர்கார்ன், மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தப் பஞ்சம், உணவு கிடைக்காத ஒரு முழு தலைமுறை குழந்தைகளையும் என்றென்றும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்.

காசா பஞ்சத்தின் உடனடி ஆபத்தை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பும் எச்சரித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...

டெல்லியில் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தடை

15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு இன்று (ஜூலை 1)...

ட்ரம்ப் நிர்வாகத்தின் நிதியுதவி குறைப்பு – உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் சாத்தியம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மேற்கொண்ட மனிதாபிமான நிதியுதவி குறைப்பு நடவடிக்கைகள், உலக நாடுகள்,...