follow the truth

follow the truth

June, 7, 2025
Homeவிளையாட்டுநியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

Published on

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவின் ரொப் வோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) பயிற்சியாளராகப் பணியாற்றுவார் என நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட்டுடன் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

வோல்டரின் முதல் போட்டித் தொடராக, சிம்பாப்வேயில் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டி20 முத்தரப்புப் போட்டி இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த கேரி ஸ்டெட்டின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதை நீட்டிக்காமல் இருக்க நியூசிலாந்து கிரிக்கெட் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

IPL இறுதிப்போட்டி இன்று – பெங்களூர் – பஞ்சாப் அணிகள் களத்தில்

ஐ.பி.எல் 18ஆவது தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் முறையாக சம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் ரோயல் செலஞ்சர்ஸ்...

இளையோருக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவிருந்த இளையோருக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மழையுடனான வானிலை காரணமாக...

ஓய்வை அறிவித்தார் ஹென்ரிக் க்ளாஸன்

தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் ஹென்ரிக் க்ளாஸன் (Heinrich Klaasen) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.