அம்பாறையில் உள்ள அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் அநாகரீகமான நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதித்து பொத்துவில் நீதவான் நீதிமன்றம் இன்று(15) உத்தரவிட்டுள்ளது.
அம்பாறையில் உள்ள அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற 26 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை பொத்துவில் மகளிர் பொலிஸார் கைது செய்தனர்.