கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயிலில் இன்று(18) காட்டு யானை ஒன்று மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அந்த யானை உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காட்டு யானை கிராமத்திற்குள் நுழைந்த போது வனவிலங்குத் திணைக்களத்திற்கு தகவல் வழங்க கிராம மக்கள் நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதிகாரிகள் தொலைபேசி இணைப்பை துண்டித்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.