follow the truth

follow the truth

July, 30, 2025
HomeTOP1துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Published on

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமைத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்கவை, அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நேரடி மற்றும் சூழ்நிலை ஆதாரங்கள் இல்லாததால், துமிந்த திசாநாயக்கவை விடுவிக்க நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டார்.

ஹெவ்லொக் நகரில் உள்ள ஆடம்பர வீட்டு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியின் உரிமை தொடர்பான விசாரணையில், கடந்த மே 23 ஆம் திகதி துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார்.

பின்னர், பிணை மனு பரிசீலிக்கப்பட்டு, ஜூலை 14 ஆம் திகதி நிபந்தனைகளின் பேரில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிந்துலையில் பயங்கர விபத்து – 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி

லிந்துலை - மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பகுதியில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு...

வெப்பமான வானிலை எச்சரிக்கை – நாட்டின் சில பகுதிகளில் இன்று முதல் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, இன்று (30) முதல் நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்...

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில், பொதுமக்களிடையே உள்ள...