பாதாள உலகக் குழு உறுப்பினர் என கூறப்படும் ‘பொடி லெசி’ எனப்படும் ஜனித் மதுஷங்கவை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி. ராகல, இன்று உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சுமார் ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கடந்த 15ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.