சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
வீடியோவில் உள்ளவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போல இருப்பதால் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
எனினும், வீடியோவில் உள்ளவர் ஜனாதிபதி அல்ல என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார். அவரைப் போன்று தோற்றமுள்ள ஒருவரே இந்த வீடியோவில் இருப்பதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
நாட்டில் பிரச்சினைகளுக்கு குறைவில்லாத இந்தக் காலத்தில் ‘இது வேறு’ என்று பலர் இந்த வீடியோவைக் கடந்து செல்கின்றனர்.