follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுகோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து இலங்கையில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு! - The Straits Times...

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து இலங்கையில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு! – The Straits Times அறிக்கை

Published on

இலங்கையில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவுவதாக The Straits Times செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், பல்பொருள் அங்காடிகள் காலியாக உள்ளதாகவும், உணவகங்களில் உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது டொலர் வருமானம் குறைவடைந்தமையின் காரணமாக வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிவாயு, மண்ணெண்ணெய், மீன், பருப்பு, அரிசி மற்றும் பரசிட்டமோல் போன்ற அனைத்தையும் கொள்வனவு செய்வதற்கு மக்கள் வீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு  கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு குறைந்து வருகிறது. இலங்கை இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடி மற்றும் கட்டமைப்பு சீர்குலையும் அபாயத்தை எதிர்கொள்கிறது

இலங்கையர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையையும் 14 சதவீத பணவீக்கத்தையும் எதிர்கொண்டுள்ள நிலையில், பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதை விட அரசாங்கம் வெளிநாட்டுக் கடன் கடமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது.

சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளிடம் இருந்து எமக்கு அதிக கடன் உள்ளது என ஜனாதிபதியின், சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வைத்தியர் மஹேஷியின் மகள் விளக்கமறியலில்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை...

“வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” – அரச அதிகாரிகளுக்கான விளக்கவுரை

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட “வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான சட்ட உதவி” தொடர்பாக, குருநாகல்...

தேங்காய் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தேங்காயின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...