உக்ரைன் போரில் ரஷ்ய தளபதி பலியானதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 9ஆவது நாளாக இன்று தாக்குதல் நடத்தி வருகிறது. கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியுள்ள ரஷ்யப் படை, இன்று உக்ரைனில் உள்ள சபரோஸ்ஸியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதுடன் தொடர்ந்து உக்ரைனின் முக்கியப் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியுடன் இயங்கி வருகிறது.
குறிப்பாக கெர்சன் மற்றும் எனர்கோடர் நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் தற்போது மிக்கலேவ் நகரையும் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், செர்னிகிவ் பகுதியில் உக்ரைன் இராணுவம் நடத்திய தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தின் 41ஆவது படைத் தளபதி ஜெனரல் ஆண்ட்ரே சுகோவெட்ஸ்கி பலியானதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.