ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனம், பிரதமர் ஆசனமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தனது கட்சியின் தலைவர், நாட்டை பொறுப்பேற்று 48 மணித்தியாலங்களிலேயே அனைத்து விதமான வரிசைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் சர்வதேசத்தின் நம்பிக்கையை இழந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அரசாங்கமொன்று அமையுமானால் சர்வதேசத்தின் உதவிகள் உடனடியாக கிடைக்குமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.